செவ்வாய், 25 ஜூன், 2013

பெரும் பயனில்லாத சொல்லை அறிஞர் சொல்லமாட்டார்


அறத்துப்பால். 
குறள் இயல்: இல்லறவியல்.  
அதிகாரம்: பயனில சொல்லாமை.
குறள் 196 முதல் 200 வரை
------------------------------



பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.        குறள் # 196.
பயனில்லா சொல்லைப் பலமுறை பேசுபனை மனிதன் எனச்சொல்லற்க
மனிதருள் பதர் எனச் சொல்லுங்கள்.          பாமரன் பொருள்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.        குறள் # 197.
அறனில்லாதவை சொன்னாலும் சொல்லலாம் அறிஞர்கள்
பயனில்லாதவை சொல்லாமை நன்று.   பாமரன் பொருள்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.       குறள் # 198.
அரிய பயன்களை ஆராயும் அறிஞர் சொல்லமாட்டார்
பெரும் பயனில்லாத சொல்லை.          பாமரன் பொருள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.         குறள் # 199.
பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார் மயக்கம் தெளிந்த
தூய அறிவை உடையவர்.          பாமரன் பொருள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.      குறள் # 200.
சொற்களில் பாயனுள்ளவை சொல்லுக சொல்லவேண்டாம்
சொற்களில் பனில்லாத சொல்.         பாமரன் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.