வெள்ளி, 19 ஜூலை, 2013

யமனிடம் தப்பிப்பதும் கைகூடும்


          அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம்

 
குறள் 266 முதல் 270 வரை

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   குறள் # 266
தவம்செய்பவரே தன்கடமையைச் செய்பவர் மற்றவர்களோ
ஆசைவயப்பட்டு வீண்முயற்சி செய்பவரே.    பாமரன் பொருள்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.    குறள் # 267
சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்போல துன்பம்
வருத்த வருத்த தவம்செய்பவர்க்கு (ஞானம்மிகும்)   பாமரன் பொருள்

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.    குறள் # 268
தன்உயிர் தான்எனும் எண்ணம் நீங்கப்பெற்றவனை மற்ற
உயிர்களெல்லாம் புகழ்ந்து வணங்கும்.   பாமரன் பொருள்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.      குறள் # 269
யமனிடம் தப்பிப்பதும் கைகூடும் தவம்செய்வதால்
வரும் வலிமை பெற்றவர்க்கு.       பாமரன் பொருள்.
 
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.      குறள் # 270
ஆற்றலில்லாதவர் பலராக இருக்கக் காரணம் தவம்செய்பவர்
சிலர், பலரோ தவம்செய்யாதவர்.      பாமரன் பொருள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
'' அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...''
தங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.