சனி, 10 ஆகஸ்ட், 2013

வாழ்வின் நிலையற்ற தன்மையை உணராதவரே மிகப் பல எண்ணங்கள்.நினைப்பர்







குறள் பால்: அறத்துப்பால். 
குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.

குறள் எண்கள் 336 முதல் 340 வரை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.     குறள் # 336
நேற்று உயிரோடு இருந்தவர் இன்று இல்லாது இறந்தார் எனும்
பெருமையை உடையது இவ்வுலகம்.     பாமரன் பொருள்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.     குறள் # 337
ஒருவேளையும் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணராதவரே நினைப்பர்
ஒருகோடியல்ல மிகப் பல எண்ணங்கள்.      பாமரன் பொருள்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.     குறள் # 338
முட்டைஓடு தனித்து கிடக்க குஞ்சு பறந்துபோனது போன்றதே
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு.         பாமரன் பொருள்

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.           குறள் # 339

தூங்குவது போன்றது இறப்பு, தூங்கி
விழிப்பது போன்றது பிறப்பு.        பாமரன் பொருள்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.      குறள் # 340
தங்கஒரு நிலையானவீடு அமையவில்லையோ, உடம்பிற்குள்
ஓர்மூலையில் தங்கியிருந்த உயிருக்கு.      பாமரன் பொருள்


2 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குறள்களும், அதன் பொருளும் மிகவும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா. பாராட்டுக்கள்.

தயவுசெய்து, நேரம் இருந்தால், நான் இன்று வெளியிட்டுள்ளதோர் சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்கள் ஐயா.

இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
//குறள்களும், அதன் பொருளும் மிகவும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா. பாராட்டுக்கள்//

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.