திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கொல்வதால் வரும் உயர்வு இழிவானதே.

குறள் பால்: அறத்துப்பால். குறள்யல்: துறவறவியல். 
அதிகாரம்: கொல்லாமை.

குறள் 326 முதல் 330 வரை

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.     குறள் # 326
கொல்லாமையை நெறியாகக் கொண்டவரின் வாழ்நாளில்
உயிரைப் பறிக்க எமன்கூட செல்லமாட்டான்.       பாமரன் பொருள்

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.          குறள் # 327
தன்னுயிரே போவதாக இருந்தாலும் செய்யாதீர் தான்இன்னொரு
உயிரை போக்கும் செயல்.        பாமரன் பொருள்

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.       குறள் # 328
கொலையால்உண்டாகும் மேன்மை பெரிதாக இருந்தாலும் சான்றோர்க்கு
கொல்வதால் வரும் உயர்வு இழிவானதே.      பாமரன் பொருள்

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து..       குறள் # 329
கொலையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் இழிவான தொழில் செய்பவராய்த் தெரிவர் இழிவை ஆராய்ந்தவர்களுக்கு.          பாமரன் பொருள்

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.   குறள் # 330
 (முன்பு) கொலைசெய்து உயிரைப் போக்கியவர் என்பர் நோய்மிகுந்த உடம்புடன் வறுமையான தீயவாழ்க்கை வாழ்பவரை.        பாமரன் பொருள்

6 கருத்துகள்:

ராஜி சொன்னது…

குறளும் அதற்குண்டான விளக்கமும் அருமை. தொடரட்டும்.

Unknown சொன்னது…

ராஜி said...
//குறளும் அதற்குண்டான விளக்கமும் அருமை. தொடரட்டும்//
தங்கள் வருகைக்கும் கருத்தினை பதிவு செய்தமைக்கும் நன்றி.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

குறலும் விளக்கமும் அழகு..

Unknown சொன்னது…

சங்கவி said...
//குறலும் விளக்கமும் அழகு//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எளிய அருமையான விளக்கங்கள்..
பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//எளிய அருமையான விளக்கங்கள்..
பாராட்டுக்கள்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.