திங்கள், 24 பிப்ரவரி, 2014

உரிய காலத்தை அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டோ?

பொருட்பால்    
அரசியல்  
அதிகாரம்; காலமறிதல்.  
குறள் 481 முதல் 490 வரை.
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.       குறள் 481
பகலில் வலிமைமிக்க கோட்டானை காக்கை வெல்லும். பகைவரை வெல்ல
தலைவருக்கு ஏற்ற காலம் வேண்டும்.           பாமரன் குறள்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.   குறள் 482.
காலந்தவறாமல் செயல்படுதல் நிலையில்லா செல்வத்தை
நீங்காமல் கட்டும் கயிறு.                  பாமரன் குறள்.

அருவினை யென்ப உளவோ கருவியான
காலம் அறிந்து செயின்.          குறள் 483
அரிய செயல் என்பது உண்டோ உரிய சாதனங்களுடன்
ஏற்ற காலத்தை அறிந்து செய்தால்.     பாமரன் குறள்.

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.      குறள் 484.
உலகமே வேண்டுமெனக் கருதினாலும் கிடைக்கும் ஏற்றகாலத்தையும்
இடத்தையும் அறிந்து செய்தால்.     பாமரன் குறள்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.     குறள் 485.
உரியகாலத்தை எண்ணி கலங்காமல் காத்திருப்பர்
உலகையே அடைய நினைப்பவர்கள்.    பாமரன் குறள்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.     குறள்  486
ஆற்றல் மிக்கவன் அடங்கியிருத்தல் போரிடும் ஆட்டுக்கடா
பகையைத் தாக்குவதற்கு பின்வாங்குவது போன்றது.  பாமரன் குறள்.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.     குறள் 487  
பகைவர் அடாது செய்தாலும் உடனே சினம் கொள்ளார் ஏற்றகாலம் பார்த்து
உள்ளேயே சினத்தை வைத்திருப்பர் அறிவுடையார்.          பாமரன் குறள்.   

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.    குறள் 488.
பகைவரைக் கண்டால் பொறுமை காக்க, முடிவுகாலம்
வரும் போது. தடையின்றி தாமே அழிவர்      பாமரன் குறள்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.      குறள் 489
கிடைப்பதற்கு அரிய காலம் வந்துவிட்டால்  அப்போதே
செய்வதற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.   பாமரன் குறள்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.    குறள்   490.
கொக்குபோல காத்திரு நேரம்வரும்வரை, அதுதன் இரையைக்
குத்துவது போல குறிதவறாது முடி காலம் வரும்போது.  பாமரன் குறள்.

 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான அதிகாரம்... இதையும் வித்தியாசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளேன் ஐயா...

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. உங்கள் எண்ணத்தை அதிசீக்கிரமே செயல்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பெயரில்லா சொன்னது…

It's amazing to visit this web page and reading the views
of all friends concerning this paragraph, while
I am also eager of getting knowledge.

Also visit my site; Plantar Fasiitis Shoes

பெயரில்லா சொன்னது…

I am really impressed along with your writing talents as neatly as with the structure on your weblog.
Is that this a paid theme or did you modify it your self?
Either way keep up the excellent quality writing, it is uncommon to peer a great weblog like this one
nowadays..

Here is my web page; grow taller 4 idiots

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.